Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தகவல் தீர்வுகளை தருகிறது ஈக்யூஃபேக்ஸ்!

நுகர்வோர் மற்றும் வர்த்தக ரீதியான தகவல் தீர்வுகளை வழங்குவதில் முன்ணனியில் இருக்கும் நிறுவனம் ஈக்யூஃபேக்ஸ். இந்த நிறுவனம் இந்தியா மற்றும் உலக அளவில்  வொயிட் காலர் குற்றங்கள், பண மோசடிகள் மற்றும் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் தகவல்களை ஒன்று திரட்டி வெளியிடப்போவதாக கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறது. இந்த ‘சிடிசி அலர்ட்’ தகவல் திரட்டானது நிறுவனங்கள், வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், நிதி ஆதார இடைத்தரகர்கள் (financial intermediaries) மற்றும் பல்வேரு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திருட்ட் வேலைகளில் ஈடுபடும் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த தகவல் திரட்டு பயன்படுமானல் அந்தந்த நிறுவனங்களின் ரிஸ்க் மற்றும் நஷ்டங்களும் குறைக்கப்படும்.

வொயிட் காலர் குற்றங்கள், பண மோசடிகள் மற்றும் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் தகவல்களை உலக அரசாங்கத்தின் ஆதரவுடன் விசாரணை ஏஜென்ஸிகளிடம், வங்கிகளிடம், கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் மற்றும் மீடியா அறிக்கைகள் ஆகியவர்களிடமிருந்து தகவலை திரட்டி வெளியிடுகிறது ஈக்யூஃபேக்ஸ் நிறுவனம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ