Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6000 கோடி நிதி திரட்டிய ஃப்ளிப்கார்ட்

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் சுமார் 6000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு நிதியை திரட்டியுள்ளது. இ-காமர்ஸ் துறையின் முன்னனி நிறுவனமான அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு நிகராக தன்னை தரமுயற்த்திவரும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது 6000 கோடி நிதி வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
 
 
பெங்களூரை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனத்தின் சிஇஓ சச்சின் பன்சால் கூறுகையில் ''நாங்கள் இந்த நிதியை கொண்டு வளர்ச்சிக்கான ஏற்படுத்தவுள்ளோம். மேலும் நாங்கள் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் பட்சத்தில் இந்தியாவின் முன்னனி 50 நிறுவனங்களுக்கு இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க சந்தைகளிலும் கால்பதிக்கும் திட்டமுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இ-காமர்ஸ் துறையில் தனது சேவையால் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 30,000 கோடி ரூபாய் முதல் 42,000 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ