Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் எண்ணிக்கை இரண்டாக குறைக்க திட்டம்.

 சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத வேறொரு வங்கியில் ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தக் கட்டணமும் செலுத்தாமல் பணம் எடுக்கலாம். இதை இரண்டு முறையாக குறைக்க வேண்டும் என வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. 

 

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ரிசர்வ் வங்கி, கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் தற்போதிருக்கும் முறையிலிருந்து எந்த மாறுதலை செய்யாமல் கடைபிடிக்கும்படி வங்கிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. 
சேமிப்புக் கணக்கு வைத்திருக்காத வங்கிகள் நடத்தும் ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கான வசதியை பலரும் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக வங்கிகள் சொல்கின்றன. எனவேதான், இந்த வசதியை ஐந்திலிருந்து இரண்டு முறையாக குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. 
மேலும், சேமிப்புக் கணக்கு வைத்திருக்காத வங்கிகள் நடத்தும் ஏடிஎம்களிலிருந்து ஒருமுறை பணம் எடுக்க தற்போது 15 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருகிறது. இதை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வங்கிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. 
வங்கிகளின் இந்த கோரிக்கை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு அனுமதிக்கும்பட்சத்தில் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களிலேயே பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது கூடுதல் கட்டணம் தந்து, பணம் எடுக்க வேண்டியிருக்கும். 
கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுக்க உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close