Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்கூட்டருக்காக தனி தொழிற்சாலை அமைக்கிறது ஹோண்டா மோட்டார்ஸ்!

ஸ்கூட்டருக்காக தனி தொழிற்சாலை அமைக்கிறது ஹோண்டா மோட்டார்ஸ்!

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. தற்போது இந்த நிறுவனம் குஜராத் அகமதாபாத்தில் 1,100 கோடி ரூபாய் செலவில் ஸ்கூட்டர் உற்பத்திக்காக தனியாக தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருக்கிறது. இன்றைய மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில் இந்த திட்டம் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாகவே இருக்கும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்கூட்டர் விற்பனை எட்டு சதவிகிதம்தான் இருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 27 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. நடப்பு நிதி ஆண்டில் 29 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஸ்கூட்டர் உள்நாட்டு சந்தையில் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு 53 சதவிகிதமாக இருக்கும். இந்த தொழிற்சாலை மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும் வகையில் இருக்கும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ