Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1800கிலோ தங்கம் எஸ்.பி.ஐயில் டெபாஸிட் செய்தது திருமலா திருப்பதி தேவஸ்தானம்

திருமலா திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி கோவிலுக்கு காணக்கையாக வந்துள்ள தங்கத்தை பல்வேறு வங்கிகளில் டெபாஸிட் செய்துள்ளது. மொத்தமாக 4335 கிலோ தங்கம் காணிக்கையாக வந்துள்ளதாகவும் அதில் பெரும் பகுதியை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு  தங்க டெபாஸிட் திட்டத்தில் டெபாஸிட் செய்துள்ளது. 
 
 
திருமலா திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரி கோபால் தங்க நகைகள் அடங்கிய பெட்டியை வங்கி அதிகாரிகளிடம் சமர்பித்தார் அவை மும்பையில் உள்ள அரசு ஆலையில் உருக்கப்பட்டு வைப்பு திட்டத்தைல் சேர்க்கப்படும். இதற்கான உருக்கும் செலவு, முமபை வரை கொண்டு சென்று எடுத்துவர ஆகும் பயண மற்றும் பாதுகாப்பு செலவை வங்கியே ஏற்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
திருமலா திருப்பதி தேவஸ்தானம் 4335 கிலோ தங்கத்தை எஸ்.பி.ஐ, கார்ப்பரேஷன் பாங்க் மற்றும் ஐஓபி ஆகிய வங்கிகளில் டெபாஸிட் செய்துள்ளது என்றும். இதற்கான ஒட்டு மொத்த வட்டியாக ஆண்டிற்கு 70 கிலோ தங்கம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ