Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி தாக்கல் இ-ஃபைலிங் சதவிகிதம் 26.8% அதிகரித்திருக்கிறது!



நடப்பு நிதி ஆண்டில் இ-ஃபைலிங் முறையில் வருமான வரி தாக்கல் சதவிகிதம், சென்ற நிதி ஆண்டை விட 26.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் தலைநகர் டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் மொத்த இ-ஃபைலிங் சதவிகிதத்தில் 50% இ-ஃபைலிங் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இ-ஃபைலிங் மூலம் வருமான வரி தாக்கல் செய்த இந்த ஐந்து மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா. இந்த மாநிலத்திலிருந்து பதிவாகி இருக்கும் இ-ஃபைலிங் 20%. இரண்டாவது இடத்தில் கர்நாடகா (11.55%), அதற்கு அடுத்த மூன்றாவது இடத்தில் குஜராத் (11.23%), நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பதிவாகி இருக்கும் இ-ஃபைலிங் சதவிகிதங்கள் முறையே 10.88% மற்றும் 9.99%.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP