Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் கனவு இல்லம் கண்காட்சி

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை புதுச்சேரி  ரோட்டரி கிளப் ஜெயராம் திருமண நிலையத்தில் கனவு இல்லம் கண்காட்சியை நடத்தியது. அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது விற்பனை மாதிரிகளையும், சிலர் நேரடியாக தங்கள் தயாரிப்புகளையும் காட்சிபடுத்தினர்.
 
பெரும்பாலன ரியல் எஸ்டேட் ப்ரோமோட்டர்கள், இரு சக்கர வாகன விற்பனையாளர்கள், உணவு மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விற்பனையாளர்கள் என பல நிறுவனங்களில் இருந்தும் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் இடம் பெற செய்தனர்.
 
 
இதில் விஸ்டம் வெல்த் கன்சல்டன்ஸி சார்பில் மக்கள் எப்படி தங்கள்  நிதிப்பிரச்னைகளை கையளுவது என்பது பற்றிய விளக்கங்களை அதன் நிறுவனர் ராஜசேகரன் விளக்கினார். இதில் நாணயம் விகடனும் தனது பங்ளிப்பை அளித்திருந்தது. 
 
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் கூறும்போது '' புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களும், மக்களும்  பயன் பெறும் நோக்கிலும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இடம்பெறவும் வழிவகை செய்வதற்காக கனவு இல்லம் என்ற பெயரில் இந்த கண்காட்சி  நடைபெறுவதாக கூறினார்.
 
மேலும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ