Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரித்துறை 2.47 லட்சம் கோடி ரீஃபண்ட்!

கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக வசூலித்த 2.47 லட்சம் கோடி யை திரும்ப கொடுத்துள்ளது வருமான வரித்துறை. 2013 - 14 நிதி ஆண்டில்  89,066 கோடியும், 2012 - 13 நிதியாண்டில் 83,766 கோடியும், 2011 - 12 நிதியாண்டில் 93,814 கோடியும் திருப்ப செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  அதே சமயத்தில் 2010 - 11, 12 - 13 ஆண்டுகளில் திருப்பி தரபட்ட தொகைக்கு வட்டியாக 23,651 கோடி வழங்கியிக்கிறது. 

இணைய தளத்தின் மூலமாக இஃபைலிங் முறையில் வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நடைமுறையை மேலும் எளிமையாக்கப்படுவதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவாக தங்களது வரிகணக்கை தக்கல் செய்ய முடியும் எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 

 
வரிசெலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் புகார்களை தீர்த்துக்கொள்ள ஆயகர் சேவா கேந்த்ரா  என அனைத்து மண்டல வருமான வரி அலுவலகங்களிலும் இயங்கும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ