Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்னாப்டீலில் முதலீடு செய்கிறதா டாடா?

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் இ-காமர்ஸ் துறை சம்பந்தப்பட்ட செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. ஃப்ளிப்கார்ட் 1 பில்லியன் டாலர் (ரூ.6000 கோடி) நிதி திரட்டியதும், அமேசான் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வர்த்தக விரிவாக்கத்திற்காக ஒதுக்கியுள்ளது போன்ற செய்திகளால் இ-காமர்ஸ் துறை மீதான எதிர்பார்ப்பு கூடியது.
 
 
இந்நிலையில் ஸ்னாப்டீலின் நிறுவனர்களில் ஒருவரான குணால் பாஹ்ல் இந்த போட்டி பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் '' ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 7 பில்லியனாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிகம்'' என கூறியுள்ள நிலையில் கடந்த வாரம் ரத்தன் டாடா ஸ்னாப்டீல் நிறுவனத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அங்கு முதலீடு பற்றிய பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
 
இ-காமர்ஸ் துறையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டியில் நிறுவனங்கள் தங்களை தனித்துக்காட்ட ஆஃபர்களை அள்ளி வழங்கும் என்பதால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ