Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக வர்த்தக ஒப்பந்த விவகாரம்: இந்தியாவின் நிலைக்கு ஐ.நா. ஆதரவு

உலக வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் உறுதியான நிலைபாட்டுக்கு ஐ.நா. அமைப்பு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
மற்ற சில நாடுகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதைவிட தனது நாட்டு மக்களின் பசியைப் போக்குவதே ஒரு அரசுக்கு முக்கியம் என்பதே இந்தியாவின் நிலை என ஐ.நா.வின் துணை அமைப்பான சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியின் தலைவர் கனாயோ நான்சே தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்கு உணவு அளிப்பது, அக்கம் பக்கத்தினருக்கு வேலை அளிப்பது ஆகியவற்றில் ஒருவரது நிலை என்ன என்று கேட்டால், குடும்பத்தினரின் பசியைப் போக்குவதுதான் பதிலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலையை ஆதரிப்பீர்களா என்று டெல்லியில் செய்தியாளர்களின் கேட்டதற்குகு நான்சே இவ்வாறு கூறினார். தனது நாட்டின் குடிமக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதை அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். உலக வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஐ.நா. அமைப்பு ஆதரித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ