Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட் VS ஐஆர்சிடிசி!


இந்தியாவின் ஆன்லைன் விற்பனையாளர்களில் மிகப்பெரிய நிறுவனம் ஃப்ளிப்கார்ட். இந்த வத்தக வலைதளத்தை மொத்தம் 2.2 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வலைதளத்தின் வருட வருமானம் சுமார் 6,000 கோடி ரூபாய். ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் இருக்கும் 15 மில்லியன் (அதாவது 1.5 கோடி) விற்பனை பொருட்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 33,000 விற்பனைகள் நடைபெற்று வருகின்றன.

      

இந்த வர்த்தக வலைதளத்தைப் போலவே ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் இந்தியாவின் ஐஆர்சிடிசி  வலைதளமும் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தைப் போல மிகச் சிறந்த வர்த்தக களமாக அமைந்துள்ளது. ஐஆர்சிடிசி வலைதளத்தின் பதிவு செய்யப்பட்ட 3.5 கோடி பேரில், இயக்கத்தில் இருக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை 2.7 கோடி. இந்த வலைதளத்தில் நாள ஒன்றுக்கு நான்கு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது ஃப்ளிப்கார்ட் வர்த்தகத்தை காட்டிலும் பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ