Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோமேக்ஸ் செல்போன் வர்த்தகத்தில் முதலிடம்!


செல்போன் நிறுவனங்களுக்குள் போட்டியின் வேகமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாம்சங், நோக்கியா போன்ற பிராண்டு நிறுவனங்களுடன் சைனா ரக செல்போன்கள் கூட போட்டி போட ஆரம்பித்துவிட்டன. இதற்கு மிக சமீபத்திய உதாரணம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஷியோமி எம்.ஐ. 3 செல்போன். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இந்திய செல்போன் விற்பனைச் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு மைக்ரோமேக்ஸ் முதலிடம் பிடித்திருக்கிறது என்பதுதான்.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் மைக்ரோமேக்ஸின் சந்தைப் பங்கு 16.6 சதவிகிதமாகவும் சாம்சங்கின் சந்தைப் பங்கு 14.4 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது. நோக்கியா, கார்பன் மற்றும் லாவா நிறுவன செல்போன்களின் சந்தைப் பங்கு முறையே 10.9%, 9.5% மற்றும் 5.6% ஆகும்.


 

மொத்த செல்போன் விற்பனையில் மைக்ரோமேக்ஸ் முன்னணியில் இருந்தாலும், ஸ்மார்ட் போன்களை வர்த்தகப்படுத்துவதில் முன்னணியில் இருப்பது சாம்சங் நிறுவனம்தான். இது நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலண்டில் 25.3% சந்தை படுத்தியிருக்கிறது. மைக்ரோமேக்ஸ் 19.1% சந்தைப்படுத்தியிருக்கிறது. நோக்கியா நிறுவனம் நான்கு சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ