Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையில் கரெக்‌ஷன்..?

பங்குச் சந்தையில் கரெக்‌ஷன்..?
வி ஆர் சீனிவாசன், ஐபின்


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது பணவியல் கொள்கை அறிவிப்பின் போதும் மற்றும் சமீபத்திய பேட்டியின் போதும்  பணவீக்கம் அதிகரிப்பு நாட்டினுடைய சேமிப்புகளுக்கும் (savings),  நிலையான  அயல்நாட்டு  நாணயப் பரிமாற்ற விகிதம் வீதத்திற்கு (a stable exchange rate)  மற்றும் வட்டி குறைப்பதற்கும்  பெரிய தடைகல்லாக  இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார்.



மேலும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் ரிசர்வ் வங்கியே கணிசமான அளவு வட்டி விகிதங்களை குறைத்தாலும் நாட்டிலுள்ள மற்ற வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கி வழியை கடைப்பிடித்து அவைகளை குறைக்காது என்றும் தெரிவித்திருக்கிறேன் என்றும் கூறிக்கிறார்.கடுமையான விலைவாசி உயர்வால் மிகவும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின் போது வட்டி விதங்கள் மற்றும் ரொக்க இருப்பு விகிதங்கள் உயரும் என்று எதிர்பார்கக்ப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி இவைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.   
 

பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடுகளும் மற்றும் உலக நிச்சயமற்ற தன்மைகளும் - (அதாவது  உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளின் பூகோள அரசியல் பதற்றங்கள் (geo-political tensions)  அமெரிக்காவில் நிலவும் குறிப்பாக வட்டி விகிதங்களின் நிலைமைகள் மற்றும் இத்தாலி, அர்ஜென்டினா போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிலவும் பொருளாதார சூழநிலைகள்) - அடுத்த சில மாதங்களுக்கு நம் நாட்டின் பங்குச் சந்தைகள் மற்றும் ரூபாய்களின் மதிப்புகளை இறக்கத்திற்கு இட்டு செல்ல  சீனிவாசன், ஐபின்                           வாய்ப்பிருக்கிறது.


முக்கியமாக, அந்நிய நிறுவனங்கள்  பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடுகள் காரணமாக லாபம் பெருவதற்காக பங்குகளை விற்க முற்படும் என்று எதிர்பார்ப்பதால் பங்குசந்தைகளின் குறியீடுகள் மற்றும் ரூபாய்களின் மதிப்புகள் கீழ நோக்கி செல்ல வாய்ப்பிருக்கிறது.

அதனால், முதலீட்டளர்கள் பங்கு சந்தைகள் இறங்கினால் (கரெக்‌ஷன்) அடிப்படையில் வலுவான நிறுவனங்களின் பங்குகளில் (shares of fundamentally strong companies) ஒரே அடியாக முதலீடு செய்யாமல் சிறிது சிறிதாக முதலீடு (சராசரி) செய்யலாம்.   

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ