Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியாவின் புதிய மருத்துவ காப்பீடு!

2008-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பாட்டில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம் சில மாற்றங்களுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் பழைய திட்டமும் தொடரும் என யுனைடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த திட்டத்தில் குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சமாகவும், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சமாகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தற்போது இதற்காக வழங்கப்பட்டுவரும் தொகை 30,000 மற்றும் 50,000 ரூபாயாக உள்ளது.

http://www.policymantra.com/blog/wp-content/uploads/2012/05/United-India-Insurance.jpg


பழைய காப்பீட்டுத் திட்டத்தில் முக்கிய நோய்கள், அறுவை சிகிச்சைககளுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து 70% காப்பீட்டுத் தொகை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்தில் இந்த வரையறை தளர்த்தப்பட்டு, முழு காப்பீட்டுத் தொகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதில் காப்பீடு செய்தவர் முக்கிய நோய்கள் மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்வது குறித்து மருத்துவர்களின் கருத்தினை பெற்றிருந்தாலும், சர்வதேச மருத்துவர்களிடமிருந்து இலவசமாக இரண்டாவது கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் பெற்றுத் தரும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ