Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 4

விவசாயப்பொருட்களில் வியாபாரம்

- தி.ரா.அருள்ராஜன்,
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

இதுவரை பார்த்த வரை எல்லாம் பன்னாநாட்டு பொருட்கள் ஆகும். இவை உலகசந்தையில் வியாபாரம் ஆகிறது. இந்திய பொருட்சந்தை காலை 10 மணிக்கு ஆரம்பித்தாலும், உலகச்சந்தை வியாபாரம் முடியும் வரை நம் சந்தையிலும் வியாபாரம் நடக்கும். அதாவது இரவு 11.30 வரை வியாபாரம் நடக்கும்.

இவை மட்டும் அல்லாது, பல்வேறு இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்களும், இந்த பொருட்சந்தைகளில் வியாபாரம் ஆகிறது. எடுத்துக்காட்டாக சொல்வதாக இருந்தால், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கர்சீட், மெந்தால் என்ற சிலவற்றை சொல்லலாம். இவற்றின் வியாபார நேரம் என்பது காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்துவிடும்.

இந்தியாவில் பொருட்ச்சந்தை வியாபாரத்தை நடத்தும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகள் ஒவ்வொரு விதமான பொருட்கள் வியாபாரத்தில் தலைசிறந்து விளங்குகின்றன.

இந்தியாவில் பொருட்சந்தை என்றால் வியாபாரம் ஆகும் மூன்று முக்கிய சந்தைகளை சொல்லலாம்.

அவை

MCX (Multi Commodity Exchange) உலோகங்களும், எனர்ஜி பொருட்களும் பிரதானம்

NCDEX (National Commodity and Derivative Exchange) விவசாய பொருட்கள் பிரதான வியாபாரம்

NMCE (National Multicommodity Exchange of India Ltd) விவசாய பொருட்கள் பிரதான வியாபாரம்.

வியாபாரம் ஆகும் விவசாய பொருட்கள்:

1 - Coffee 
2 - Copra, Coconut Oil & Coconut Oil cake 
3 - Castor Seed, Oil & Oilcake 
4 - Cardamom 
5 - Cumin seed 
6 - Groundnut seed, oil & oil cake 
7 - Gold Study 
8 - Lin Seed 
9 - Pepper 
10 -Pulses 
11 -Rape/Mustard Seed, Oil & Oil cake 
12 -Rubber 
13 -Safflower seed 
14 -Salient features of Oil 
15 -Sesame Seed 
16 -Silver Study 
17 -Soy Seed, Oil & Oil cake 
18 -Sugar 
19 -Sunflower seed 
20 -Raw Jute 
21 -Wheat 
22 -Chana 
23 -Guar Seed

 

இந்த பொருட்களுக்கும் வியாபாரம் ஆகும் யூனிட் விலை, லாட் அளவு, மார்ஜின் மற்றும் எக்ஸ் பயரி தேதிகள் உண்டு.

எடுத்துக்காட்டு:

பொருள்

எக்ஸ்பயரி

விலை

யூனிட்

லாட்

மார்ஜின்

லாட் மதிப்பு

மார்ஜின்%

POTATO

28-Aug-2014

1485

100 KGS

15 MT

222750

11137.5

5

POTATO

30-Sep-2014

1580

100 KGS

15 MT

237000

11850

5

 

கவனம் தேவை:

பொருட்சந்தை என்பது முழுக்க முழுக்க வியாபாரம் சார்ந்தது. எனவே சரியான வியாபார திட்டம் உள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் வெற்றி பெற முடியும். மேலும் இது ஃப்யூச்சர்ஸ் வகை வியாபாரம். அதாவது, ரூ.5000 முதலீடு செய்துவிட்டு ரூ.1,00,000 மதிப்புள்ள பொருட்களை வியாபாரம் செய்கிறோம். நாம் எடுக்கும் ஒரு சில தவறான முடிவுகளால், அந்த வியாபாரம் தவறான வியாபாரமாகி நாம் நம் போட்ட முதலீட்டை இழக்க செய்துவிடும். அதே சமயம் பெரும்பாலான வியாபாரங்களை சரியாக செய்பவர்களுக்கு இது நல்ல லாபத்தை கொடுக்கும்.

எனவே இதை செய்ய முறையாக பயிற்சி எடுத்தே ஈடுபடவேண்டும் என்பது என்னுடை வேண்டுகோள்.

பொருட்சந்தையில் விலையானது பொதுவாக தேவை மற்றும் அளிப்பின் அடிப்படையில் நகர்கிறது. எனவே எந்த பொருட்களின் சந்தை கையிருப்பு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதை பொருத்து விலை நகரும். இந்த கையிருப்பு விவரங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தந்த கூட்டமைப்புகள் வெளியிடும். அந்த நாட்களில் விலை வெகுவாக ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும். கவனம் தேவை.

ஸ்பாட் எக்ஸ்சேஞ்;

இந்த தொடரின் முதல் பகுதியில், பியூச்சர்ஸ் வியாபாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்கமாக எழுதி இருந்தேன். அதில் கேஷ் மார்கெட் பற்றியும் எழுதி இருந்தேன். அதை திரும்ப சொல்கிறேன்...

கேஷ் மார்கெட் அப்படின்னா என்ன?

இதை தமிழில் ரொக்க சந்தை என்றும் அழைக்கிறோம். கேஷ் மார்கெட்டை நாம் தமிழில் உள்ள ஒரு வழக்கு வாக்கியத்தை உபயோகித்து விளக்கலாம். அதாவது , கையில காசு வாயில தோசை. இப்ப உங்களுக்கு நல்லா தெரியுமே, எவ்வளவு பங்கு வாங்குவதாக இருந்தாலும், முழுசா காசு கொடுத்துதான் வாங்கனும்.

மேலே சொன்ன விளக்கத்தை கொடுத்துவிட்டு, பியூச்சர்ஸ் வியாபாரம் என்பது, கான்டிராக்ட் மதிப்பில் குறைவான ஒரு தொகையை கொடுத்துவிட்டு அதிக மதிப்பிலான பொருட்களில் வியாபாரம் செய்வது என்றும் கூறி இருந்தேன்.

இந்த கேஷ் மார்கெட்டுக்கும், பியூச்சர்ஸ் மார்கெட்டுக்கும் உள்ள உறவு முறையை பார்க்கலாம்.

கேஷ் மார்க்கெட் என்பதற்க்கு இன்னும் ஒரு பெயர், ஸ்பாட் மார்கெட். ஸ்பாட் என்ற ஆங்கில வாரத்தைக்கு அந்த இடத்திலேயே என்று அர்த்தம் அல்லவா. இந்த வார்த்தைக்கு நாமும் அதே அர்த்தத்தை அல்லது உடனடியாக என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸ்பாட் மார்க்கெட்டில் என்ன நடக்கும். இந்த சந்தையில் பொருளை உற்பத்தி செய்பவர்கள் அந்த பொருளை விற்பதற்காக அந்த ஸ்பாட் சந்தைக்கு எடுத்து செல்வார்கள். அதே பொருட்களை வாங்க விரும்புவர்கள் ஸ்பாட் சந்தைக்கு வருவார்கள். விற்பவர்களும் வாங்குபவர்களும் தங்கள் பொருளை ஒரு மதிப்பு மாற்றிக்கொள்வாரகள். இது பெரும்பாலும் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே புரோக்கர்கள் வழியாக நடைபெறும்.

இதற்க்கு எடுத்துக்காட்டாக நாம் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையை சொல்லலாம். இங்கு உற்பத்தி காய்கறிகளை உற்பத்தி செய்பவர்கள் கொண்டுவருவார்கள், விற்பார்கள், காசை எடுத்து செல்வார்கள். காய்கறியை வாங்கவருவார்கள், காசை கொடுத்து வாங்கிக்கொண்டு காய்கறியை வாங்கிச் செல்வார்கள்.

இப்போது ஸ்பாட் மார்கெட் என்றால் என்ன?

அது எப்படி இயங்குகிறது?

கடைசியில் பணபட்டுவாட எப்படி உடனடியாக நடக்கிறது என்றும் பாரத்தோம்.

அடுத்தகட்டமாக இந்த சந்தையில் எப்படி விலை ஏறுகிறது மற்றும் இறங்குகிறது என்றும் பார்ப்போம்.

இது மிக மிக முக்கியமான அம்சம் ஆகும். அதாவது, இந்த விலையில் ஏற்படும் மாற்றம்தான், நாம் கமாடிட்டி சந்தை என்று சொல்லும், பொருட்சந்தையிலும் விலைமாற காரணமாக இருக்கிறது.

சரி, இப்போது விலை மாற்றம் எவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக விலை என்பது சந்தையால் தீர்மானிக்கபடுவது என்று சொல்வோம். இதில் வேறு எந்த சக்திகளும் ஈடுபாடாமல் இருப்பதே சந்தை ஆரோக்கியமாக இருப்பதற்க்கு அடையாளம். சந்தையில் பொருட்களின் விலை எவ்வாறு மாறுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

சூழல் 1:

கோயம்பேடு மார்க்கெட்டு தினமும் 100 கிலோ கத்தரிக்காய் வருவதாக வைத்துக்கொள்ளலாம். வந்த மொத்த 100 கிலோ கத்திரிக்காயும் அதே தினம் விற்றுபோவதாகவும் வைத்துக்கொள்ளாலம். இந்த பரிமாற்றம் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.15/- என்ற விலைக்கு நிகழ்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

இதே போல் தினமும் நிகழ்ந்தால், கத்தரிக்காய் விலை ரூ.15/- என்ற விலைக்கே வியாபாரம் ஆகும்.

சூழல் 2:

இனி ஒரு வித்தியாசமான சூழலை பார்க்காலம். திடீரென்று ஒருநாள் சந்தைக்கு 100 கிலோ கத்தரிக்காயுக்கு பதிலாக 70 கிலோ கத்தரிக்காய்தான் வருகிறது என்று எடுத்துக்கொள்ளுவோம். தினம் 100 கிலோ கத்திரிக்காய்க்கு தேவே இருக்கும் இடத்தில், கிடைத்திருப்பதோ 70 கிலோ மட்டுமே. அப்போது, தினமும் கத்திரிக்காய் வாங்கவருபவர்கள் இடையே போட்டி ஏற்படுகிறது. கத்தரிக்காய் உனக்கா எனக்கா என்ற போட்டி வரும்போது, ஒருவர் மற்றவரைவிட அதிகவிலை கொடுக்க முன்வருகிறார். மூன்றாமவர், அதைவிட அதிகவிலை கொடுக்க முன்வருகிறார்.

இப்படி இவர்கள் போட்டியின் அடிப்படையில் விலை கேட்க முடிவில் கத்தரிக்காய் அன்று ரூ.20/- என்ற விலையில் வியாபாரம் ஆகிறது.

சூழல் 3:

ஒருநாள் திடீரென்று சந்தைக்கு 130 கிலோ கத்தரிக்காய் வருகிறது. ஆனால், தேவை என்னவோ 100 கிலோ மட்டுமே. இந்த நிலையில், தேவைக்கு அதிகமாக கத்தரிக்காய் சந்தையில் இருப்பதால், விற்பவர்கள் இப்போது, போட்டியின் அடிப்படையில் விலையை குறைக்க ஆரம்பிக்கிறார்கள். விற்பவர்கள் எப்படியாவது, தங்கள் பொருட்களை சந்தையில் விற்றுவிடவேண்டும் என்ற முனைப்பில், விலையை குறைக்க குறைக்க, கடைசியில் கத்தரிக்காய் சந்தையில் ரூ.10/- என்ற விலையில் வியாபாரம் ஆகிறது.

கத்தரிக்காயின் விலை எவ்வாறு சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. சப்பளை மற்றும் டிமான்ட் அடிப்படையில் கத்தரிக்காயின் விலை எவ்வாறு ஏறுகிறது மற்றும் இறங்குகிறது என்று பார்த்தோம்.

இதைத்தான் ஸ்பாட் மார்கெட் விலை என்று கூறுகிறோம்.

இனி நாம் பியூச்சர்ஸ் மார்க்கெட் விலைக்கு வருவோமா?

நாம் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வியாபாரம் ஆகும் பொருட்களின் விலையும், ஸ்பாட் மார்க்கெட்டில் வியாபாரம் ஆகும் விலையின் அடிப்படையில்தான் வியாபாரம் ஆகும். இதை அன்டர் லையிங் என்று சொல்லுவோம். அதாவது, அன்டர்லையிங் என்று சொல்லப்படும், ஸ்பாட் மார்கெட் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, பியூச்சர்ஸ் மார்கெட்டிலும் விலை ஏறி இறங்கும்.

இதனால் நாம் தெரிந்துகொள்வது என்னவெனில்...

பியூச்சர்ஸ் மார்கெட்டில் வியாபாரம் செய்யும் நாம், ஸ்பாட் மார்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதின் மூலம், (அதாவது விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மார்கெட்டில் அந்தந்த பொருட்கள் எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது) விலை ஏற்ற இறக்க வாய்ப்புகளை அறிந்துகொள்ளலாம்.

ஆனால் விலை மாற்றத்தில் நாம் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சம், நமக்கு சந்தை நிலவரம் தெரியவருவதற்க்கு முன்பே, சந்தை ஆப்பரேட்டர்களுக்கு தெரியவந்து, விலை ஸ்டாக் நிலவரம் வரும் முன்னரேகூட நகர ஆரம்பிக்கலாம். அதை எப்படி சமாளிக்கலாம் என்பதற்க்கு தெரியவேண்டிய வழிமுறைகளில் ஒன்று டெக்னிக்கல் அனாலிசிஸ்.

எனவே, இந்த சந்தையில் வியாபாரம் செய்ய டெக்னிக்கல் அனாலிசிஸ், அதாவது வரைபடம் படிக்கும் முறையை கட்டாயம் கற்க வேண்டும். அப்படி தயார்செய்துகொண்டு மட்டுமே இந்த சந்தையில் ஈடுபடுவது நல்லது.

 

ஒரு பொருளின் விலை ஸ்பாட் மார்கெட்டிலும் பியூச்சர்ஸ் மார்கெட்டிலும் ஏன் வெவ்வேறு விலைகளில் வியாபாரம் ஆகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ