Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் கார்களின் விற்பனை வளர்ச்சி 6.52%!

இந்தியாவில் கார்களின் விற்பனை வளர்ச்சி 6.52%!

இந்தியாவில் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் 6.52% அதிகரித்துள்ளது. சென்ற மாதத்தில் மட்டும் 1,99,435 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,87,234 கார்கள் விற்பனையானது. அதே போல ஜூலை,2013-ல் 41,572-ஆக இருந்த மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்து கடந்த ஜூலை,2014-ல் 51,461 ஆக உள்ளது. பேருந்து மற்றும் டிரக் வண்டிகளின் விற்பனை 47,765 ஆக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே கால கட்டத்தை விட 13.64% குறைவு. குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் 12,87,462 பைக்குள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 13.73% அதிகம்.


ஜூலை மாதத்தில் கார்களின் விற்பனையை  நிறுவனம் வாரியாக பார்க்கும் போது, மாருதி சூசுகி நிறுவனத்தின் கார் விற்பனை 19.9 சதவிகிதமும், ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 12.7 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ஹோண்டா மற்றும் டொயாட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார்கள் விற்பனை உயர்வு சதவிகிதங்கள் முறையே 39.38% மற்றும் 3.53% ஆகும். இந்த இரு நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்க மிக முக்கிய காரணம் புதிய ரக கார்களை அறிமுகம் செய்ததுதான். அதே சமயத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனத்தின் கார் தேவையானது மந்தமாக காணப்படுவதுதான். இந்த இரு நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி 32.4%. மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி 9.04%.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close