Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்னேப்டீலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது கர்நாடகா அரசு!


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மக்கள் மத்தியில் விற்க ஏதுவாக இருக்கவும் கர்நாடக அரசாங்கம் ஆன்லைன் மார்க்கெட் நிறுவனமாக ஸ்னேப்டீலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து களம் இறங்கியுள்ளது. இந்த ஏற்பாட்டின் மூலம் சிறு, குறை மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்களின் பொருட்களை உலக அளவில் விற்க முடியும் என்பதே கர்நாடக அரசின் எண்ணமாகும்.

                                          

கர்நாடக அரசு ஏற்கெனவே ஸ்னேப்டீலுடன் இந்த செயல்பாட்டை நடைமுறை படுத்திவிட்ட நிலையில், ஆன்லைன் மார்க்கெட் நிறுவனங்களின் ஜாம்பவானான அமேசான் நிறுவனத்துடனும் பார்ட்னர்ஷிப் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைமுறையில் இருப்பதாகவும் கர்நாடக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ