Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமானிகள் விடுத்த எச்சரிக்கை... பதற்றத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்!


விமானிகளுக்கு நிலுவையிலுள்ள சம்பள பாக்கியை ஆகஸ்ட், 20-ம் தேதிக்குள் வழங்காவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் மொத்தம் 1,000 விமானிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 600 பேர் விமான கமாண்டோக்களாக பதவி வகிக்கிறார்கள்.
   
விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும்மோது, ''கடந்த 2010--ல் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிறுவனமானது திருத்தம் செய்தது. ஆனால் அதை இன்றுவரை நடைமுறைக்கு கொண்டுவரவே இல்லை. இதனாலேயே கடந்த மூன்று ஆன்டுகளாக சம்பள உயர்வே எங்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகும் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறிவருகிறது. எனினும் வழங்கப்படுவதில்லை அதனால் வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்கவில்லை என்றால் நிச்சயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ