Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்பில் வழக்கு பதிவு செய்யலாம்: டெல்லி போலிஸ்

 ஸ்மார்ட் போன்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு அடுத்த  உதாரணத்தை கொடுத்துள்ளது டெல்லி காவல்துறை. ஸ்மார்ட்போன்   பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக வாட்ஸ்அப் அப்ளிகேஷன் வசதியையும் பயன்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள். இதை புரிந்து கொண்ட  டெல்லி காவல்துறை இனி வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளது. குறிப்பாக லஞ்ச ஒழிப்பு புகார்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்ப ஒரு மொபைல் எண் அறிவித்துள்ளது. 

 
இந்த எண்ணிற்கு லஞ்ச புகார் அளிக்க அது தொடர்பான வீடியோ அல்லது புகைப்படத்தை வாட்ஸ் மூலம் அனுப்ப வைத்தால் அடுத்த சில மணி நேரத்திற்குள் நடவடிக்கை நிச்சயம் என்கிறது டெல்லி காவல்துறை.  புகைப்படம் அல்லது வீடியோவின் உண்மை தன்மையை உடனடியாக ஆராய்ந்து, புகார் அளித்தவருனுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
 
இந்த  மாதம் 6 ஆம் தேதிஅறிமுகப்படுத்தபட்ட இந்த திட்டத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளது. அறிமுகப்படுத்தபட்ட அன்றே 14 வீடியோ புகார்களும், 7&ஆம் தேதி 2 புகார்களும், 8&ஆம் தேதி 27 புகார்களும் வந்துள்ளது. 
 
இதில் 5 உண்மையான புகார்களும் மற்றவை திட்டம் குறித்து தெரிந்து கொள்ள அனுப்பிய புகார்கள் என்றும்,
இந்த புகார்கள் அடிப்படையில் 3 காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 
 
வாட்ஸ்அப் புகார் குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் சம்பந்தபட்ட காவலர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஊழல்தடுப்பு மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் வசதியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு டெல்லி காவல்துறை வழிகாட்டியுள்ளது.   
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ