Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்றைய நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்த இந்திய சந்தைகள் இன்று ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 25918 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து  7739 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.26 ரூபாயாக உள்ளது. ஐடிசி, ஹச்.சி.எல் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், பி.ஹச்.இ.எல் நிறுவன பங்குகள் 6 சதவிகிதம் குறைந்தும் வர்த்தகமாகி இருந்தன.
 
மதியம் 2 மணி நிலவரம்:
காலையில் ஏற்றத்தோடு துவங்கிய இந்திய சந்தைகள் மதியம் 2 மணி நிலவரப்படி சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 38 புள்ளிகள் சரிந்து 25842 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 7713 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.27 ரூபாயாக உள்ளது.
 
காலை நிலவரம்:
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்று  (13.08.2014) ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 66 புள்ளிகள் அதிகரித்து 25947 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 7748 புள்ளிகளாகவும் வர்த்த்கமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.25 ரூபாயாக உள்ளது. குறிப்பாக பிபிசிஎல், ஹச்.சி.எல் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், பாங்க் ஆஃப் பரோடா பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ