Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரத்தன் டாடாவுக்கு விருது!

தொழில் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது, ரத்தன் டாடாவுக்கு சென்னையில் வழங்கப்பட்டது. அமால்கமேஷன்ஸ் குழுமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விருதை ரத்தன் டாடாவுக்கு வழங்கினார். இந்த விழாவினை எம்.எம்.ஏவும், அதன் அமால்கமேஷன் குழுமமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் ரத்தன் டாடாவை பற்றியும் அவரது சாதனைகள் குறித்தும் இந்துஜா குழுமத்தின்  துணைத்தலைவர் சேஷசாயியும், எம்.எம்.ஏவின் முன்னாள் தலைவரான மல்லிகா சீனிவாசனும் சிறப்புரையாற்றினர்.
 
 
இவ்விருதினை பெற்ற ரத்தன் டாடாவிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரத்தன் டாடா நிதானமாக அளித்த பதில்கள் ''இந்தியவால் அரசும் - கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் இடையேயான உறவு பற்றி கேட்ட கேள்விக்கு அரசும் இந்திய நிறுவனகளும் இணைந்து நட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும்போது தான் இந்தியாவில் புதிய திறமைகள் அடையாளம் காணப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். நாட்டின் வளர்ச்சியில் மாற்றம் கொண்டுவர இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களும், அரசும் இணைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் தொழிற்துறையின் வளர்ச்சி தடுக்க முடியாத விஷயமாக இருக்கும் என்றார்.
 
1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது ரத்தன் டாடாவிற்கு முன்பு வரை 17 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் விருதை ஜே.ஆர்.டி டாடாவிற்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது 45 வருடங்கள் கழித்து டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனப்தும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் எம்.எம்.ஏவின் பல்வேறு உறுப்பினர்களும், தொழிற்துரையினர் பலரும் கலந்து கொண்டனர். 
 
படம்: தே.தீட்ஷித்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close