Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்சங்கை ஓரங்கட்டிய ஜியோமி

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஓரங்கட்டி வருகிறது ஜியோமி. நடப்பு நிதி ஆண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் 14 சதவிகித மார்க்கெட் ஷேரை பிடித்து முன்னணியில் உள்ளது.  இதற்கு முன்பு சந்தையை தன் வசம் வைத்திருந்த சாம்சங் 12 சதவிகித மார்க்கெட் ஷேருடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
 
மேற்கத்திய சந்தையில் அதிகம் கவனம் செலுத்தாத ஜிமோமி தனது விற்பனை இலக்காக சீனா சந்தையையே அதிகம் நம்பி இருக்கிறது. சாம்சங் போன்களைவிட ஜியோமி போன்கள் அதிக அளவில் விற்பனையானதன் மூலம் உலகின் முன்னணி மொபைல் நிறுவனமாக வளர்ந்துள்ளது ஜியோமி.
 
உலகின் இதர நாடுகள் சந்தையை விடவும் சீனாவின் சந்தை பெரியது. அதாவது உலக அளவில் 10 ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 4 ஸ்மார்ட் போன்கள் சீனாவில் மட்டுமே விற்பனையாகிது. இதனால்தான் அனைத்து நிறுவனங்களும் சீனா சந்தை குறி வைத்து இறங்குகின்றன. சீன சந்தையில் குறிப்பிட்ட மார்க்கெட் ஷேரை பிடித்துவிட்டால் அதற்கு பிறகு இதர நாடுகளின் சந்தையை குறி வைக்கலாம் என்பதுதான் இந்த நிறுவனங்களில் இலக்கு. 
 
இந்த விற்பனையின் மூலம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலான சீனாவில் அதிக அளவில் விற்பனையாகிகொண்டிருந்த சாம்சங், லினோவா, ஹாவாய் போன்ற மொபைல்  போன்களின் விற்பனையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஜியோமி. 
 
இந்த நிறுவனம் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை துவங்கிய அன்று ஃப்ளிப்கார்ட் இணையதளமே செயல்பட முடியாத அளவுக்கு ஆர்டர்கள் இருந்தது. 
அதாவது நிமிடத்துக்கு இரண்டு போன்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் கவனம் பெறதொடங்கியுள்ள ஜியோமி இங்குள்ள சந்தையை கைப்பற்றினாலும் ஆச்சர்யமில்லை. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் என்கிற வகையில் சாம்சங் விற்பனையை பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ