Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் 1.5 லட்சம் வேலை!

இன்று செல்போன் தொடங்கி நாம் சாப்பிடும் உணவு வரை எல்லாமே ஆன்லை மயமாகி விட்டது. இதன் பிரதிபலிப்பாக இந்தியாவில் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சியும், ஆன்லைன் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் 2015க்குள் இந்தியாவில் 1.5 லட்சம் பேருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வேலை கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். 
 
 
ரான்ஸ்டட் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் '' வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செல்போன் மற்றுய்ம் இன்டர்நெட் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் தகவல்களை நேரடியாக தெரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்றார்
 
நடப்பு ஆண்டில் மட்டும் 25000 பேருக்கு இந்த துறையில் வேலை தேவைப்படுவதாகவும், இந்த துறைக்கு வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு ஆரம்ப சம்பளம் 4.5 லட்சத்திலிருந்து 5.5 லட்சம் வரை இருக்கும் என்று ரான்ஸ்டட் இந்தியா கணித்துள்ளது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ