Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் பேங்கிங் பயன்பாடு அதிகரிப்பு!


ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில் மொபைல் பேங்கிங் மூலம் செய்யும் பண பரிவர்த்தனை அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை. நம் நாட்டின் தனியார் துறை வங்கிகளில் மிக முக்கிய வங்கியான ஐசிஐசிஐ,  மொபைல் பேங்கிங் பரிவர்த்தனையில்  முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த 2014, ஜூன் மாத நிலவரப்படி  இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 1,021 கோடி ரூபாய் அளவுக்கு மொபைல் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 333.20 கோடி ரூபாயாக இருந்தது.




இதற்கு அடுத்த இடத்தில்  இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள் 795.60 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 266.30 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன், 2014 நிலவரப்படி மொபைல் பேங்கிங் மூலம் மேற்கொண்ட பண பரிவர்த்தனை அளவுகள் முறையே 586.10 கோடி ரூபாய் மற்றும் 546.30 கோடி ரூபாய். இந்த இரண்டு வங்கியின் மொபைல் பேங்கிங் மூலம் மேற்கொண்ட பண பரிவர்த்தனை ஜூன்,2013 நிலவரப்படி 115.80 கோடி மற்றும் 210.70 கோடி ரூபாயாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ