Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏடிஎம் பயன்பாட்டு கட்டணம்: ஆர்பிஐ புதிய நெறிமுறை

 ஏடிஎம் பயன்பாட்டு கட்டணம்: ஆர்பிஐ புதிய நெறிமுறை

 

ஏடிஎம் பயன்பாட்டு கட்டணங்களுக்கு புதிய நெறிமுறைகளை ஆர்பிஐ இன்று அறிவித்துள்ளது.இதன்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்காத வேறு வங்கி ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில், மெட்ரோ நகரங்களில் (டெல்லி,மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்)  செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஐந்திலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது எனவும், மெட்ரோ அல்லாத நகரங்களில் செய்யப்படும் பரிவர்த்தணைகளுக்கு அதே ஐந்து என்ற அளவு தொடரும் என்றும் அறிவித்துள்ளது.இது வரும் நவம்பர் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது

 
இதுதவிர, ஏடிஎம் மையங்களில் இது மெட்ரோ நகர ஏடிஎம் மையமா, இல்லையா என்பதை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதற்கான சேவைக் கட்டணம் 20 ரூபாய் வரை இருக்கலாம். வேறு எதாவது சேவை கட்டனம் வங்கிகள் விதித்தால் அதுவும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

குழப்பமில்லாமல் அனைத்து விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு புரியும் விதமாக, தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவிப்புகளை வங்கிகள் கட்டாயம் வெளியிட வேண்டும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த செய்தி நடுத்தர மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 


 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP