Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா ரியாலிட்டி & யுனிடெக் நில ஒப்பந்தம்: சிபிஐ விசாரணை

டாடா ரியாலிட்டி  &  யுனிடெக் நில ஒப்பந்ததுக்கு ஈடாக கைமாறிய ரூ. 1700 கோடி குறித்து சிபிஐ புலனாய்வை தொடங்கியுள்ளது. எந்த நோக்கத்தின் பொருட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதை நோக்கிய விசாரணையாக இது இருக்கும் என்றும் 2008 ஆம் ஆண்டு டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 2ஜி ஒப்பந்தம் குறித்தும் ஆராயும் என அறிவித்துள்ளது சிபிஐ. இதற்கு முன்பு நடந்த விசாரணைகளில் இந்தக் கோணத்தில் ஆராயவில்லை. 
 
 இந்த விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த விசாரணை குறித்து டாடா ரியாலிட்டி நிறுவன செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்த போது இந்த விசாரணை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. டாடா ரியாலிட்டி நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்துக்கு முன்கூட்டியே கொடுத்த தொகைக்கு ஈடாக 2ஜி தொலைபேசி சேவை லைசன்சை பெற்றுள்ளது. இப்போது மீண்டும் இந்த விவகாரம் ரூ. 1700 கோடி விவகாரம் சூடு பிடித்துள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ