Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய 1000 ரூபாய் நோட்டு

ரிசர்வ் பேங்க் புதிய வடிவமைப்பில் 1000 ரூயாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது.  இந்த நோட்டுகள் எம்ஜி என்கிற என்கிற வரிசையில் துவங்கும். இந்த புதிய நோட்டுகளில் ரூபாய் குறியீடான ஆர் (R) என்பதும் இடம் பெறும்.
 
 
மகாத்மா காந்தி சீரிஸ் 2005 என்பதன் சுருக்கம்தான் எம்ஜி சீரிஸ். இந்த ஆண்டுக்குள் அச்சடித்து புதிய ரூ 1,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவர உள்ளது. முன்னர் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளிலிலிருந்து அனைத்து விதங்களிலும் ஒரே வடிவமைப்பில் இருக்கும் என்றாலும் ரூபாய் குறியீடும், எம்ஜி சீரிஸ் புதிதாக இடம்பெறும். 
 
ஏற்கனவே ரூ 10, ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 500, ரூ 1000 புழக்கத்தில் உள்ள எம்ஜி சீரிஸ் 2005 ரூபாய் நோட்டுகளை விடவும் புதிதாக வெளிவரும் நோட்டுகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close