Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

க்ளீன் இந்தியா - கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு

க்ளீன் இந்திய திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிக் கூடங்களில் ஒழுங்கான கழிவறைகள் இல்லை. இதை மாற்ற வேண்டும். முக்கியமாக பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் சரியான கழிவறை வசதி இல்லாதது தனக்கு வேதனை அளிக்கிறது என்று உருக்கமாக குறிப்பிட்டார். இதற்காக க்ளீன் இந்தியா என்கிற திட்டத்தையும் அறிவித்தார். 
 
இந்த திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. பெண்கள் பயிலும் 10,000 பள்ளிக்கூடங்களுக்கு ரூ.100 கோடி செலவில்  கழிவறைக் கட்டிடங்கள் கட்டித்தர டிசிஎஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ என்.சந்திரசேகரன் ‘‘ இந்த அடிப்படை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், மாணவர்களின் கல்வித்தரம் உயரும். இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்று குறிப்பிட்டார். 
 
பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியான மாவட்டத்தை தேர்வு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர். அடுத்த மூன்று ஆண்டுகளில் லூதியான மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் கழிவறை இல்லை என்கிற நிலைமையை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
 
இந்த நிறுவனங்கள் தவிர கோக்கோ கோலா நிறுவனம், பெப்சிகோ உள்ளிட்ட பல நிறுவனங்களும் இந்த க்ளீன் இந்தியா திட்டத்திற்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ