Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுப்புது மாடல்கள் - டாடா மோட்டார்ஸ் திட்டம்.

 
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.  
இது குறித்து நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவர் ரஞ்சித் யாதவ் '2020 ஆம் ஆண்டு வரை இந்தப் புதுப்புது மாடல்கள்  உத்தியை பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். 
 

 

இந்த உத்தியை ஹெட்ச்பேக், செடான்ஸ், எஸ்யூவி என அனைத்து வகை கார் உற்பத்தியிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தவர், அதே நேரத்தில் பழைய மாடல்களும் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 


செடான் வகை கார்கள் விற்பனையில் கிழக்குப் பிராந்தியத்தில் 48 சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாகவும், ஒட்டுமொத்தமாகக் கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் ரஞ்சித் யாதவ் தெரிவித்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP