Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெபிட் கார்டிலும் இஎம்ஐ வசதி!

 

டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இஎம்ஐ வசதியை அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ வங்கி. டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் அதற்கு உடனடியாக நமது வங்கி கணக்கிலிருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும் என்பதுதான் இப்போது உள்ள நடைமுறை. ஆனால் ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தும் இந்த வசதிபடி, பொருட்கள் வாங்கியதும் மொத்த பணத்தையும் செலுத்த வேண்டாம். மூன்று மாதம், ஆறு மாதம், ஒன்பது மாதம் அல்லது ஒரு வருடம் என்கிற அடிப்படையில் இஎம்ஐ யாக திரும்ப செலுத்தலாம்.

ஆனால் இதற்கு வைப்பு நிதி வைத்துள்ளவராக இருக்க வேண்டும். இந்த வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகிதத் தொகைவரை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். வைப்பு நிதியை திரும்பப் பெறும்போது இஎம்ஐ நிலுவை இருந்தால் கழித்துக் கொள்ளப்பட்டுப் பணம் திரும்ப தரப்படும். இந்த வசதிக்கு 13 சதவிகித வட்டி கணக்கிடப்படும். ஆனால் ஒரு வருட வைப்பு நிதிக்கு வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டி 8 சதவிகிதம்தான். 
 
பொருட்கள் வாங்கினால் உடனடியாக பணத்தைக் கட்ட வேண்டும் என்கிற அவசரம் இல்லை. அதேநேரத்தில் கிரெடி கார்டு வேண்டாம் என ஒதுங்கி இருப்பவர்களுக்கு இந்த வசதி பயனுடையதாக இருக்கும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இப்படியான இதுவரையில் இஎம்ஐ வசதியை  கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்தி வருகின்றனர். முதல்முறையாக டெபிட்கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கொண்டுவருகிறது ஐசிஐசிஐ வங்கி. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP