Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக அந்நிய முதலீடு குறைவு!


செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் (பார்ட்டிஸிபேட்டரி நோட்ஸ் - P-Note) வாயிலாக உலக பணக்காரர்கள், தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் இதர வெளிநாட்டு நிறுவங்கள் ஆகியவை இந்திய பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் டெரிவேட்டிவ்ஸ்களில் முதலீடு செய்வார்கள்.  இந்த முதலீடானது கடந்த ஜூலை மாதத்தில் 2.08 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது என செபி அமைப்பு தெரிவித்துள்ளது.

இது ஜூன் மாதத்தில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.24 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. 2014-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் முறையே 1.63 லட்சம் கோடி, 1.72 லட்சம் கோடி, 2.07 லட்சம் கோடி, 1.87 லட்சம் கோடி மற்றும் 2.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ