Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இறுதி நிலவரம்:

இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 45 புள்ளிகள் அதிகரித்து 26360 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 7891 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன..

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.67 ரூபாயாக உள்ளது. 

காலை நிலவரம்:

இந்திய பங்குச் சந்தை இன்று (21.08.2014) ஏற்றத்தில் துவங்கியுள்ளது. காலை 10.20 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  85.02 (0.32%) உயர்ந்து  26399.31 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 21.20  உயர்ந்து 7896.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 

கைல் , பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, ஒஎன் ஜிசி, ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், யுனைடெட் ஸ்பிரிட், என் எம்டிசி ஆகிய பங்குகள் சுமார் ஒரு சதவிகிதத்திற்குக்கு மேல் குறைந்து வர்த்தகமானது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 60.63 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ