Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தக பார்வை

 சேமிப்பு_முதலீடு தகவல் களஞ்சியம்

 
Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: சி.சரவணன்
 
Price: Rs. 105 ( India ) 
Price: Rs. 275 ( Outside India ) 
 
பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு எல்.கே.ஜி. (லேனர்ஸ் நாலேட்ஜ் கைட்) ஆக இருக்கும். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும்.
 
 
மணி மணி மணி!
 
Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: அனிதா பட்
 
Price: Rs. 60 ( India ) 
Price: Rs. 160 ( Outside India ) 
 
இன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பொன்&பொருள்களைப் பெருக்கலாம், வசதியாக வாழலாம் என்று வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்படி, வாழ்க்கையில் பணப் பிரச்னைகளாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், விலைவாசிகள் உயர்வதாலும் சிரமத்தில் திண்டாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும், வசதியாக வாழ விரும்புகிறவர்களுக்கும் தங்களின் சின்னச் சின்ன சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கையை வசதியாக, பாதுகாப்பாக வாழ வழி வகைகளைச் சொல்கிறது இந்த நூல். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட். அவள் விகடனில் தொடராக வரும்போதே பலபேருக்குப் பயன் தந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், நிச்சயம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கவும் வழிகாட்டும்!
 
 
 
காசேதான் காதலிடா
 
Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: சுரேஷ் பத்மநாபன்
 
Price: Rs. 60 ( India ) 
Price: Rs. 160 ( Outside India ) 
 
ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகள்தான் உங்கள் கைகளை அலங்கரிக்கும் 'காசேதான் காதலிடா!' 'செஸ் விளையாடுவது எப்படி?', 'ஆங்கிலம் பேசுவது எப்படி?' என்று சகலவிதமான விஷயங்களையும் கற்றுக் கொடுக்க எத்தனையோ வகுப்புகள் இருக்கின்றன. ஆனால், 'பணத்தைப் பெருக்குவது எப்படி?' என்று மட்டும் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தனியாக எந்தப் பள்ளிக்கூடமும் இல்லை.
 
இது பற்றி யோசித்த போதுதான், 'பணம் ஈட்டுவது பாவகாரியமல்ல!' என்று உரக்கப் பேசிய சுரேஷ் பத்மநாபனின் குரல் எங்கள் காதுகளுக்குக் கேட்டது.
 
படிப்பறிவும் பட்டறிவும் ஒருசேர நிரம்பியிருக்கும் சுரேஷ் பத்மநாபன், பணம் பற்றிய தனது புரட்சிகரமான வாதங்களுக்கு வலிமை சேர்த்த விதம் எங்களைக் கவர்ந்தது. என்ன ஆச்சரியம்..! அவரது கட்டுரைகள் விகடனில் வெளிவர ஆரம்பித்ததும் பணத்தின் தன்மை பற்றி வாசகர்கள் கேள்விக்கணைகள் தொடுத்துத் தள்ளிவிட்டார்கள். பிரமித்துப்போன சுரேஷ் பத்மநாபன், வாசகர்களின் கேள்விக்களுக்கு தான் மட்டும் பதில் சொன்னால் போதாது என்று, அடிமட்டத்திலிருந்து உயர்ந்த உதாரண புருஷர்களைத் தன் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க உதவிக்கு அழைத்துக்கொண்டார்.
 
 
டேக் இட் ஈஸி பாலிசி
 
Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: க. நித்ய கல்யாணி
 
Price: Rs. 65 ( India ) 
Price: Rs. 185 ( Outside India ) 
 
வாழ்வில் நாம் பல்வேறு தேவைகளையும் வசதிகளையும் பெற உழைக்கவும் சேமிக்கவும் வேண்டியது அவசியம். அப்படி நாம் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயம். அதற்கு உதவுவதுதான் இன்ஷுரன்ஸ் பாலிசி.
 
இந்தியாவில் லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் தொடங்கி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கமே அதனிடம் கடன் வாங்கும் அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ந்து, உயர்ந்து நின்றது.
 
க. நித்ய கல்யாணி எழுதி நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இன்ஷுரன்ஸ் என் சேவகன் மற்றும் மோட்டார் விகடன் இதழில் எழுதிய டேக் இட் ஈஸி பாலிசி கட்டுரைகள் தொகுக்க‌ப்ப‌ட்டு இந்த‌ நூலாக வெளிவந்துள்ள‌து.
 
நியூ இண்டியா அஷ்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் மிகுந்த நூலாசிரியர், ஆயுள் காப்பீட்டின் அவசியத்தையும் பயனையும் எடுத்துக் கூறுகிறார். பல நிறுவனங்கள் பாலிசியை விரிவுபடுத்தியுள்ளது பற்றியும், லண்டன் மாநகரமே பெரும் தீ விபத்தால் நிலைகுலைந்து நின்ற சமயம் அதிலிருந்து மீண்டுவர தோன்றியதுதான் இன்ஷுரன்ஸ் திட்டம் என்று அது உருவான வரலாற்றையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ