Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஷூரன்ஸ் கோரப்படாத தொகை: ஐஆர்டிஏ அதிரடி..

 இன்ஷூரன்ஸ் கோரப்படாத தொகை: ஐஆர்டிஏ அதிரடி..


இன்ஷூரன்ஸ் திட்டங்களை முதலீடாக பார்க்கும் மனோபவம்தான் இந்தியாவில் உள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசி என்றதுமே எண்டோமென்ட் பாலிசிகளைதான் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பிரீமியமாக செலுத்திய பணம் திரும்ப கிடைக்கும். செலுத்தும் பிரீமியத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பதாலும் பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதையே குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கமாட்டர்கள். 


பாலிசிதாரருக்கு ஏதாவதுஅசாம்பவிதம் நிகழும் போது அந்த பாலிசியில் க்ளைம் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள். மேலும் பாலிசி எடுத்திருப்பதை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காத காரணத்தினால் பல நேரங்களில் முதிர்வு க்ளைம் செய்யாமலே விட்டுடுகிறார்கள். இன்னும்  சிலர்  பிரீமியம் சரியாக செலுத்தாமல் இடையில் விட்டுவிடுகிறார்கள்.
 
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை கட்டுபடுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதாவது  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் இணையதளத்தில் 1000 ரூபாய்க்கு மேல் உள்ள கோரப்படாத இன்ஷூரன்ஸ் க்ளைம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.  

செலுத்திய பிரீமியத்தை திரும்ப தருவது, சரண்டர் தொகை, முதிர்வு தொகை, இறப்பு க்ளைம்  ஆகியவற்றை அதன் முதிர்வு தேதியிலிருந்து ஆறுமாதத்திற்கு மேற்ப்பட்ட க்ளைம்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

எனவே முதல் கட்டமாக  2014 டிசம்பர் மாதம் வரை உள்ள தகவல்களை 2015 ஜனவரி 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அதன் பிறகு  அரையாண்டுக்கு  ஒருமுறை அப்லோடு செய்யப்படும். 
 மேலும் பாலிசி எண் தெரியவில்லை என்றால் பாலிசிதாரரின் பெயர், பிறந்த தேதி, பான் நம்பர் ஆகியவற்றை கொடுத்து க்ளைம் விவரத்தை தெரிந்துக் கொள்ளும் விதமாக வசதி செய்து கொடுக்க வேண்டும். .
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ