Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 6

கமாடிட்டி பொருட்கள் விலை விவரங்கள்பாகம் 5
ஸ்பாட் விலையும் ஃபியூச்சர்ஸ் விலையும்
 

- தி.ரா.அருள்ராஜன்,

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
 
ஸ்பாட் விலையை விட ஃபியூச்சர்ஸ் விலை சற்றே கூடுதலாக இருக்கும் என்று பார்த்தோம்.  அதோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த மாதங்களின் விலையானது கூடுதலாக இருக்கும்.  அதற்கு காரணம் காஸ்ட் ஆஃப் கேரி என்றும் விளங்கி இருந்தேன்.
 
இந்த விலை வித்தியாசத்தை இன்னும் சில கமாடிட்டி மூலமும் பார்க்கலாம்.
தேதி: 20.08.2014
 
சில்வர்:
சில்வர் ஸ்பாட் விலை  ஒரு கிலோ = ரூ. 42257/-
சில்வர் செப்டம்பர் 2014 ஒரு கிலோ  = ரூ. 42314/-
சில்வர் டிசம்பர் 2014 ஒரு கிலோ    =  ரூ. 43078/-
 
காப்பர்:
காப்பர் ஸ்பாட் விலை ஒரு கிலோ = ரூ.418.50
காப்பர் ஆகஸ்ட் 2014 ஒரு கிலோ  =  ரூ.425.05
காப்பர் நவம்பர் 2014 ஒரு கிலோ  =  ரூ.433.95
 
மேலே பார்த்த இரண்டு எடுத்துக்காட்டிலும், ஸ்பாட் விலையை விட, ஃபியூச்சர்ஸ் விலை கூடுதலாக இருப்பதை பார்க்கலாம்.  அடுத்து, நடப்பு மாத கான்டிராக்ட்டைவிட அடுத்த மாதங்களின் கான்டிராக்டுகள் விலை கூடுதலாக இருப்பதை பார்க்கிறோம்.  இதற்கு காரணம் காஸ்ட் ஆஃப் கேரி என்பதை விளக்கமாக பார்த்துள்ளோம்.
 
கான்ட்டாங்கோ (Contango)
இவ்வாறு, ஸ்பாட் விலையை விட ஃபியூச்சர்ஸ் விலை கூடுதலாக இருந்தால், கான்ட்டாங்கோ (Contango) என்று அழைக்கப்படுகிறது.  பொதுவாக காஸ்ட் ஆஃப் கேரியை விட, பியூச்சர்ஸ் விலையானது, அதிகமாக இருக்கலாம் என்று கூறியிருந்தேன்.  அப்படி இருந்தால், அந்த விலையானது, பிரீமியத்தில் வியாபாரம் ஆகிறது என்று அர்த்தம் என்று பார்த்தோம்.  அப்படி ஒரு பொருள் பிரீமியத்தில் வியாபாரம் ஆனால், அந்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அந்த பொருளின் விலை எதிர்காலத்தில் நன்கு ஏறும் என்று நம்புகிறார்கள் என்று அர்த்தம்.  ஆகவேதான், அவர்கள் காஸ்ட் கேரிக்கு கொடுக்கவேண்டிய தொகையைவிட கூடுதல் தொகை கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு ஸ்பாட் விலையானது, ஃபியூச்சர்ஸ் விலையைவிட கூட இருப்பதை பற்றி இவ்வளவு விளக்கமாக பேசுகிறோம் என்றால்.... என்றால்....
அப்படி என்றால், ஃபியூச்சர்ஸ் விலை ஸ்பாட்விலையைவிட குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?
ஆம்.....
வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் பேக்வர்ட்டேஷன் என்பர்.
 
இப்போது நாம் கான்ட்டாங்கோ முறையில் வியாபாரம் ஆகும் ஒரு பொருளை வரைபடத்தின் மூலமும் பார்க்கலாம்.  நாம் எடுத்துக்கொள்ளும் எடுத்துக்காட்டு லெட்.  இந்த உலோக்த்தை பொருத்தமட்டில், தற்போது ஏறுமுகமாகவே உள்ளது.  எனவே இது மேலும் ஏறுவதற்க்கு வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி ஏறுமுகமாக இருக்கும் லெட் பற்றிய விலை விவரங்களை பார்க்கலாம்.
 
லெட் 20.08.2014:
லெட் ஸ்பாட் விலை ஒரு கிலோ = ரூ.136.95
லெட் செப்டம்பர் 2014 ஒரு கிலோ = ரூ.137.10
லெட் அக்டோபர் 2014 ஒரு கிலோ = ரூ.137.50
 
இந்த எடுத்துக்காட்டில், ஸ்பாட் விலையைவிட லெட்டின் செப்டம்பர் விலை கூடுதலாக உள்ளது.  அக்டோபர் விலை செப்டம்பர் விலையைவிட கூடுதலாக உள்ளது.  எனவே நாம் மேலே படித்த கான்ட்டாங்கோ வரையறைக்குள் இந்த பொருள் வருகிறது.
 
லெட் தற்போது எவ்வாறு நகர்கிறது என்பதை ஒரு வரைபடத்தின் மூலம் பார்க்கலாம்.
 
மேலே உள்ள லெட் வரைபடத்தில், விலையானது மிகவும் வலிமையாக ஏறிக்கொண்டு இருப்பதை பார்க்கிறோம்.  இப்படி வலிமையான ஏற்றத்தில் விலை இருக்கும்போது,  காஸ்ட் ஆஃப் கேரி கணக்கின்படி விலை அடுத்தடுத்த மாதங்களில் கூடுதலாகவே உள்ளது.
 
பேக்வர்ட்டேஷன் (Backwardation)
பேக்வர்ட்டேஷன் என்பது, ஸ்பாட்விலையை விட ஃபியூச்சர்ஸ் விலை குறைவாக இருப்பதை காட்டுகிறது.  இதை நாம் சொல்வதோடுமட்டுமல்லாமல் சில எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம்.
 
மென்தாயில் 20.08.2014:
மென்தாயில் ஒரு கிலோ ஸ்பாட்விலை =  ரூ.781.90
மென்தாயில் ஆகஸ்ட் 2014 ஒரு கிலோ விலை = ரூ.705.50
மென்தாயில் செப்டம்பர் 2014 ஒரு கிலோ விலை = ரூ.718.40
மென்தாயில் அக்டோபர் 2014 ஒரு கிலோ விலை = ரூ.729.50
மென்தாயில் நவம்பர் 2014 ஒரு கிலோ விலை = ரூ. 743.20
 
இந்த எடுத்துக்காட்டில், மென்த்தாயில் ஸ்பாட் விலையைவிட பியூச்சர்ஸ் விலையானது குறைவாக இருப்பதை பார்க்கிறோம்.  இதைத்தான் பேக்வர்ட்டேஷன் (Backwardation) என்று அழைக்கிறார்கள்.
இந்த சூழலை ஆராய்ந்து பார்த்தால், ஸ்பாட் விலையைவிட பியூச்சர்ஸ் விலை குறைவாக இருப்பது அந்த பொருளின் விலை எதிர்காலத்தில் குறையும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.  அதாவது ஸ்பாட் விலையிலேயே பியூச்சர்ஸ் விலை இருந்தால், அங்கு காஸ்ட் ஆஃப் கேரிக்கு உண்டான செலவை இழக்கிறோம் என்று அர்த்தம்.  ஸ்பாட் விலையை விட ஃபியூச்சர்ஸ் விலை இன்னும் குறையும்போது, வியாபாரிகள் பொருளின் விலை இன்னும் அதிக அளவில், வரும் மாதங்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஏன் அப்படி நிகழ்கிறது?
 
பொதுவாக ஒரு பொருளின் விலை டிமான்ட் மற்றும் சப்ளையின் அடிப்படையில் நகர்கிறது என்று பார்த்து இருக்கிறோம்.  ஒரு பொருளின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே போகிறது என்று என்றால், டிமான்ட் குறைகிறது என்றும், கூடவே சப்ளை கூடிக்கொண்டே போகிறது என்றும் பொருள்.
 
 
 
மென்தாயில் பொருத்தமட்டில், அதன் வியாபாரம் உள்நாட்டிலும் நடக்கிறது, ஏற்றுமதி மூலம் வெளிநாட்டிலும் நடக்கிறது.  மேற்கத்தியநாடுகளின் சந்தை விரிவாகாமல் தேங்கி கிடப்பதால் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், உள்நாட்டிலும் மென்தாயிலை உபயோகப்படுத்தும் நிறுவனங்களும் தங்கள் தேவையை குறைத்துள்ளன.  எனவே இந்த பொருளுக்கான தேவை குறைந்து கொண்டே போகிறது.   மறுபுறம், இந்தியாவில் உற்பத்தியாகும், மெத்தாயிலின் அளவு கூடிக்கொண்டே போகிறது.  விவசாயிகள் அதிகஅளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையே மென்தாயிலின் விலை வீழ்ச்சிக்கு காரணமாகிறது.  அதுவும், ஃபியூச்சர்ஸ் விலை ஸ்பாட் விலையைவிட குறைவாக வியாபாரம் ஆகி வருகிது.
 
மென்தாயிலின் வரைபடத்தை கீழே காணலாம்.
 
 
மேலே உள்ள மென்தாயிலின் படத்தில், விலையானது தொடரந்து பல மாதங்களாக இறங்கிக்கொண்டு இருப்பதை பார்க்கலாம்.  பல மாதங்களாக தொடரும், இறக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இன்னும் இறங்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்புகிறார்கள்.  எனவேதான் அடுத்தடுத்த வரக்கூடிய ஃபியூச்சர்ஸ் மாதங்களிலும், மென்தாயிலின் விலை குறைவாகவே வியாபாரம் ஆகி வருகிறது.
 
இதை இன்னும் சிறப்பாக நாம் புரிந்துகொள்ளவேண்டுமானால், நமக்கு அறிமுகமான ஒரு பொருளை எடுத்துக்கொள்ளலாம். அதுதான் மாம்பழம்.  நம்மை பொருத்தவரை, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாம்பழம் கொஞ்சம் கொஞ்சம் வர ஆரம்பிக்கும். அப்போது மாம்பழம் விலை கூடுதலாக இருக்கும்.  பின்பு, மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் வர ஆரம்பிக்கும் அப்போது விலை குறைய ஆரம்பிக்கும்.  பின்பு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  சந்தைக்கு வரும் மாம்பழத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும்.  அப்போது விலை கூட ஆரம்பிக்கிறது.
இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாமா?
 
ஸ்பாட் பியூச்சர்ஸ்   
  1 கிலோ மார்ச் ஏப்ரல் மே   
மார்ச் 150 160 140 110   
ஏப்ரல் 130   
மே 100   
ஜூன் 60  
 
மேலே உள்ள கட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் மாம்பழத்தின் ஸ்பாட் விலையை கொடுத்துள்ளேன்.  இதில் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை எப்படி படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்க்கிறோம்.  அனுபவ பூர்வமாக நமக்கும் இது தெரியும்.  ஆகவே இந்த எடுத்துக்காட்டு நமக்கு எளிய முறையில் புரியும்.
 
பின், மார்ச் மாத்த்தின் ஸ்பாட் விலையுடன், அதே மாதத்தில் மற்ற மாத கான்டிராக்டுகளான, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களின் விலையை கொடுத்துள்ளேன்.  இதில் மார்ச் ஃபியூச்சர்ஸ் விலையானது, மார்ச் ஸ்பாட் விலையைவிட குறைவாக உள்ளது.. பின்பு, அடுத்த மாதங்களின் ஃபியூச்சர்ஸ் விலையானது, குறைந்து கொண்டே போவதை பார்க்கலாம்.  காரணம், அந்த மாதங்களில், மாம்பழத்தின் வரவு கூடி ஸ்பாட் விலை குறைவாக இருக்கும் என்பதே ஆகும்.  அந்த மாதங்களில் ஸ்பாட் விலை குறைவாக இருக்கும் என்பதால்,  சம்பந்தபட்ட மாதங்களின் ஃபியூச்சர்ஸ் விலையும் குறைவாக உள்ளது.  நடப்பு மாதம், மார்ச்சாக இருந்தாலும், வரக்கூடிய மாதங்களில், மாம்பழ வரத்து கூடும் எனபதுதான் அடிப்படை செய்தி. இந்த மாதியான சப்ளை மற்றும் டிமாண்ட் பற்றிய தகவல்களை படித்து ஆராய்ந்து செயல்படுவதுதான், கமாடிட்டி சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு. (Fundamental Analysis)
 
இதுவரை நாம் பார்தது, பேக்வர்டேஷன் என்ற வரையறைக்கு உட்பட்ட ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அடுத்து மாறுபட்ட சில விலை நகர்வுகளை அடுத்து வரும் கட்டுரைகளில் விளக்கமாகவும், சில எடுத்துக்காட்டுகளுடனும் பார்க்கலாம்.
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ