Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

600 மில்லியன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை தொட்டது வாட்ஸ்அப்!

உடனடி தகவல் ஆப்ஸ் நிறுவனமான வாட்ஸ்அப் தற்போது மாதாந்திர பயனீட்டாளர்களின் 600 மில்லியனை தொட்டுவிட்டதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் கோம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு அடுத்தபடியாக வீசாட் 438 மில்லியன் வாடிக்கையாளர்களுடனும், வைபர் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுடனும் உள்ளது.
 
 
இதில் மொத்த வாடிக்கையாளர் என்பது நோக்கமல்ல, எத்தனை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள் என்பது தான் உண்மை! ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் ஆப்ஸ் அதன் பின் ஒரு டாலர் அல்லது சுமார் 60 ரூபாய் என்ற அளவிற்கு வசூலிக்கிறது.
 
ஏற்கெனவே ஃபேஸ்புக் இந்த நிறுவனத்தை 19 பில்லியன் டால்ருக்கு வாய்ங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டமே வர்த்தகத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP