Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏசியன் மாநாட்டில் பங்கேற்கவில்லை!

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏசியன் மாநாட்டில் பங்கேற்கவில்லை!
 
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. கடைசி நேர தகவலின் படி மியான்மரில் நடக்க உள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதற்கு அரசு தரப்பில் உரிய காரணம் கூறப்படாவிட்டாலும்.பிரதம மந்திரி அறிமுகம் செய்ய இருக்கும் மாபெரும் நிதி உட்புகுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேறகவில்லை என கூறப்படுகிறது.
 
சென்ற மாதம் சார்க் மாநாட்டையும் இவர் நாடாளுமன்ற கூட்டத்திற்காக புறக்கணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் இவர் சில ஒப்பந்தங்களுக்காக இந்தோனேஷிய மற்றும் சீன மந்திரிகளை சந்திக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்புகளும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ