Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸியோமி எம்ஐ3 மீண்டும் அதிரடி விற்பனை!

ஸியோமி எம்ஐ 3 ஸ்மார்ட்போன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.சீனத்தயாரிப்பான இந்த ஸியோமி எம்கடந்த நான்காண்டுகளுக்கு முன் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டது. 

பல்வேறு ரக போன்களை தயாரித்தாலும் இதன் எம்என்ற மாடல் நிறுவனத்தை சீனாவின் நான்காவது மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறதுமுதலில் மென்பொருள் நிறுவனாக துவங்கப்பட்டு வெற்றி கண்டபின் 2011ம் ஆண்டு எம்என்னும் தனது முதல் மொபைல் சாதனத்தை வெளியிட்டது

அன்றிலிருந்து இன்று வரை லாபத்தை மட்டுமே பெற்று வருகிறதுஇந்த நிறுவனத்தை சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கிறார்கள். ஏனென்றால் ஆப்பிளும்,ஸியோமியும் வன்பொரும் மற்றும் மென்பொருளைத் தங்கள் சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிறுவனத்தின் காலாண்டு உற்பத்தி ஆப்பிள் நிறுவனத்தை மிஞ்சிவிட்டதுசீனாஹாங்காங்மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே கிடைத்துவந்த இந்த மொபைல் இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஜீலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மொபைல் முதல் தவணையிலேயே 20,000 போன்கள் 39 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தன

அதே போலஇந்த வாரம் வரையிலான நிலவரத்தில் மொத்தம் 95,000 போன்கள் விற்கப்பட்டுள்ளனஅடுத்த தவணை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் நிலையில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பையும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையே சவாலான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்யோமி. பயனாளர்கள் பலரும் முன்பதிவு செய்ய ஒரே நேரத்தில் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தை பயன்படுத்தியதால் அந்த தளம் சில மணி நேரங்கள் முடக்கப்பட்டது என்றால் ஸ்யோமிக்கு இருக்கும் மவுசு பற்றி சொல்லவா வேண்டும்!.

ஸியோமியின் வளர்ச்சி நடுத்தர மக்களுக்காகன ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கும் சாம்சங்,மோட்டோரோலா மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகியவற்றின் சந்தையை பிடித்துள்ளதுஅடுத்ததாக வரும் செப்டம்பர் மாதத்தில் 6000 ரூபாய் மதிப்பிலான ரெடிமி1எஸ் என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

-மா..மோகன் பிரபாகரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ