Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்ஐசி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் முகாம்.

எல்ஐசி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் முகாம்.
எல்ஐசி நிறுவனம், 6 மாதங்களுக்கு மேல் பிரீமியம் செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் 15.10.2014 வரை நடைபெறும். இதில் பாலிசியை புதுப்பிக்கும் பாலிசிதாரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது அபராத கட்டணத் தொகையில்  தள்ளுபடி, உடல் பரிசோதனை, மருத்துவ சான்றிதழ் அளிப்பதில் விலக்கு, 5 வருடங்களுக்கு மேல் காலாவதியான பாலிசிகளை சில சலுகைகளுடன் புதுப்பித்துக் கொள்ளலாம். 

 

 

பிரீமியத் தொகை தள்ளுபடி

அபார தொகையில் தள்ளுபடி

அதிகபட்ச தள்ளுபடி  

ரூ. ஒரு லட்சம் வரை

20%

1500

ரூ. 1,00,001 மேல் மூன்று லட்சம் வரை

25%

2000

ரூ. 3,00,001 லிருந்து அதற்கு மேல்

30%

500

 

இந்த சலுகைகளை பயன்படுத்தி பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கிளை, துணை,மினி அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள், முகவர்களை அணுகலாம். 
மேலும் இந்த முகாமில் அதிக ரிஸ்க் கொண்ட பாலிசிகள், ஹெல்த் இன்ஷூரன்ஸ், மைக்ரோ இன்ஷூரன்ஸ் பிளான், டேர்ம் ரைடர், தீவிர நோய் சிகிச்சை ரைடர்  பாலிசிகளுக்கு எந்த விதமான சலுகையும் கிடையாது. இந்த பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளவும் முடியாது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ