Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஎல்எஃப் ரூ.630 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட் உறுதி

 டிஎல்எஃப் ரூ.630 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட் உறுதி 
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் மீது கம்பிடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா 630 கோடி ரூபாய் அபாரதம் விதித்துள்ளது. அதாவது முறையற்ற வணிகம் நடத்தியதாக கூறி இந்த அபாரதத்தை விதித்துள்ளது. இந்த அபராதத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. 



மேலும் இந்த அபாரத தொகையில் 50 கோடி ரூபாயை அடுத்த மூன்று வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை அடுத்த மூன்று மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அபார தொகையான 630 கோடி ரூபாய்க்கு 9 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

2013-14ம் நிதியாண்டின் இந்த நிறுவனத்தின் மொத்தம் வருமானம் ரூ. 8,298 கோடியாகும். இதில் அபாரத தொகையான ரூ. 630 கோடி என்பது 7.5 சதவிகிதம் ஆகும். 
இந்த உத்திரவை அடுத்து டிஎல்எஃப் பங்கின் விலை சுமார் 4 சதவிகிதத்திற்கு மேல் சரிந்து 183 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP