Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.எஃப். பிடித்தம் வரம்பு 15,000 ரூபாயாக உயர்வு.

நிறுவனங்கள், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் பி.எஃப். தொகைக்கான சம்பள வரம்பு  15 ஆயிரம் ரூபாயாகவும்,  குறைந்தபட்ச பென்சன் தொகை ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும் குடும்ப நல பென்சன் 95 திட்டத்தின் கீழ் செயல்பட்ட இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கவரேஜ் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 


அதாவது வேலை செய்யும் சமயத்தில்  பணியாளர் இறந்துவிட்டால் இந்த இன்ஷூரன்ஸ் 
திட்டத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி கிடைக்கும். இந்த 
தொகை அதிகபட்சம் 1.56 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது அதன் கவரேஜ் 
உயர்ந்துள்ளது. அதாவது 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என பி.எஃப் கமிஷ்னர் கே.கே. சலான் தெரிவித்தார். 


இதுவரை பென்ஷன் பெறுபவர்களில் 28 லட்சம் பேர் ஆயிரம் ரூபாய்க்கு கீழ் பென்ஷன் வாங்குகிறார்கள். இதன் மூலமாக 5 லட்சம் விதவைகள், உட்பட 28 லட்சம் பேர் உடனடியாக பயன் அடைவர்கள். பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தின் கீழ் மொத்தம் 44 லட்சம் பேர் பென்ஷன் வாங்குகிறார்கள். 

சமீபத்தில் 2014-15ம் நிதியாண்டுக்கான பிஎஃப் முதலீடு வட்டி விகிதம் 8.75 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ