Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா

 இன்று இந்தியாவில் இன்னொரு பெரிய சாதனையை ஆரம்பிக்கிறது. அது தான் "ரூபே" என்னும் 100 சதவிகித இந்திய பேமென்ட் கேட்வேயை ஆரம்பித்திருக்கின்றனர். 

 
இந்தக் கணக்கு மூலம் அனைத்து ஏடிஎம்களிலும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இலவசமாக சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் பணம் எடுக்க இயலும். "பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா" என்னும் திட்டத்தின் மூலம் இலவச வங்கி அக்கவுன்ட் திறக்க இயலும். வெறும் ஆதார் அட்டை மட்டும் போதும்.
 
அக்கவுன்ட் திறக்க பணம் தேவையில்லை. அதுபோக சராசரி அக்கவுன்ட் ஆபரேஷன் இருந்தால் மினிமம் பேலன்ஸ் மெயின்டெய்ன் செய்ய தேவையில்லை. முக்கியமாக ஒரு லட்சம் ரூபாய் இலவச காப்பீடு உண்டு. இது வங்கி அல்லது உங்கள் ஊரில் உள்ள சிறப்பு முகாம் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கமுடியும். எல்லா இந்தியரும் ஒரு கணக்கு துவங்கவே இந்த ஏற்ப்பாடு.
 
இந்த இலவச வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்டு இலவசமாக பெற்று அனைத்து இந்திய ஏடிஎம்கள் / டெபிட் கார்டு பர்ச்சேஸ் / மற்றும் ஆன்லைன் வர்த்தகமும் பெற முடியும். இன்று மட்டும் 70,000 - 1 லட்சம் கணக்குகள் திறக்க டார்கெட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ