Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - செட்டிநாட்டுக்கு நல்லகாலம்தான் !

பெரிய இடத்து விவகாரம் வெட்டவெளிச்சமாகும் என்று நான் நினைக்கவே இல்லை’’ என்றபடி கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்று கோரிக்கை வைத்தோம்.

‘‘செட்டிநாட்டு ராஜா பரம்பரையைச் சேர்ந்த 83 வயதான எம்ஏஎம் ராமசாமி எத்தனை ஆண்டு காலம்தான் ஒரு குழும நிறுவனங்களை ஆக்டிவ்வாக நடத்த முடியும்? அடுத்த தலைமுறை தயாராகி நிற்கும்போது அவர்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இருபது ஆண்டுகளுக்குமுன் தத்து எடுத்துக் கொண்ட சுவிகாரப் புத்திரன் முத்தையா, செட்டி நாடு நிறுவனத்தின் நிர்வாகத்தில் நுழைந்தபின், அந்த நிறுவனம் அபாரமான வளர்ச்சி காணத் தொடங் கியது. கம்பெனிக்குள் கார்ப்பரேட் அணுகுமுறையைக் கொண்டுவந்தார். 80 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தில் இன்றைக்கு ரிசர்வ் தொகையாக மட்டுமே 1,250 கோடி ரூபாய்க்குமேல் இருக்கிறது. செட்டிநாடு குழும நிறுவனங்களை இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருப்பதில் தப்பில்லையே. முதலீட்டாளர்களும் இளைய தலைமுறைதான் இன்றைய பிசினஸ் சூழலில் சாதிக்க முடியும் என நம்பிக்கையோடு இருந்ததைக் கடந்த வாரம் நடந்த கம்பெனியின் வருடாந்திர கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங் களிலிருந்தே பார்க்க முடிந்தது. செட்டி நாடு நிறுவனங்கள் இனி நன்கு வளர்ச்சி அடைந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அள்ளித்தரும் என்று எதிர்பார்க்கலாம்’’ என்றவரை, அடுத்த டாபிக்குக்குள் இழுத்தோம்.

‘‘ஃபிக்ஸட் டெபாசிட் கடன் மோசடியில் பல வங்கிகளின் பெயர்கள் அடிபடுகிறதே?’’ என்றோம்.

‘‘வங்கிகளுக்கு இது போதாத காலம். வாராக் கடன் எகிறி கிடக்கும் நிலையில், கடன் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக சிண்டிகேட் வங்கி சேர்மன் எஸ்.கே.ஜெயின் சமீபத்தில் கைதானார். இந்த நிலையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஃபிக்ஸட் டெபாசிட் மீது முறைகேடாக கடன் கொடுத்த மோசடியின் அளவு 1,000 கோடிக்குமேல் இருக்கும் என கண்டுபிடித்துள்ளது.
இதில் தேனா பேங்க், ஐஓபி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யூகோ பேங்க், சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க், தனலஷ்மி பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் பெயர் அடிபடுகிறது. இதுவரைக்கும் 10 எஃப்ஐஆர்கள் போடப்பட்டிருக்கிறது. நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வங்கிப் பங்குகளை வைத்திருப்பவர்கள் இந்த விவகாரத்தைக் கொஞ்சம் ஃபாலோ பண்ணுவது நல்லது’’ என்று எச்சரித்தார்.

‘‘சன் பார்மா - ராக்பாக்ஸி இணைப்பில் என்ன பிரச்னை?’’ என்று விசாரித்தோம்.

‘‘சன் பார்மா, ராக்பாக்ஸியை 400 கோடி டாலருக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தது. இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு நியாயமான தாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா விரும்புகிறது. அந்தவகையில், அது இன்னும் 10 தினங்களுக்குள் இந்த இணைப்பு குறித்த முக்கிய தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் இணைப்பில் இந்த கமிஷன் தலையிடுவது இதுவே முதல்முறை” என்று விளக்கம் தந்தார்.

‘‘டிஎல்எஃப் பங்கு மறுபடியும் விழ ஆரம்பித்திருக்கிறதே?’’ என்றோம்.

 

மேலும் வாசிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ