Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 8000! அடுத்த இலக்கு என்ன?

இரு வாரங்களுக்கு முன் நிஃப்டி புள்ளிகள் 8000 நோக்கி செல்கிறது என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அது இனறைக்கு நிறைவேறி இருக்கிறது.
 
இன்று சந்த ஆரம்பித்த சிறிது நேரத்தில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி முதல் முறையாக 8000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியது.தேசிய பங்குச்சந்தையின் இந்த வளர்ச்சி மோடியின் 100 நாட்கள் முடிவதை தொடர்ந்து இந்த உயர்வு இருக்கலாம் எனப்படுகிறது. 
 
 

இது குறித்து டெக்னிக்கல் அனலிஸ்ட் எஸ்.ஷங்கரிடம் கேட்டபோது ''சந்தை உச்சத்தில் இருப்பதால் மிகவும் கவனமாக வர்த்தகம் செய்ய வேண்டும். நிஃப்டி 8000 புள்ளிகளை தொடும் என்பது எதிர்பார்த்ததே. அதே போல் நிஃப்டியின் அடுத்த இலக்கு என்பது தற்போதைய நிலைப்படி 7899க்கு கீழ் சென்றால் நிச்சயம் நிஃப்டி சரிவை சந்திக்கும்.

 
ஸ்டாப் லாஸ் 7965 ஆக இருக்கும்போது அதிகபட்சமாக 8058 வரை செல்லும் 8058 என்ற நிலையை எட்டினால் அடுத்த இலக்காக 8108 புள்ளிகள் என்ற அளவிற்கு நிஃப்டி உயர வாய்ப்புள்ளது என கூறினார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ