Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர்ந்து வரும் உள்ளாட்டு உற்பத்தி மதிப்பு!

2014 ஜூன் காலாண்டில் இந்திய ஜிடிபி GDP வளர்ச்சி 5.7 சதவிகிதமாக உள்ளது. கடந்த இரண்டரை வருடத்தில் இல்லாத அளவாக இந்த வளர்ச்சி  உள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இது 4.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. 
 
சில முக்கிய துறைகளும் அவற்றின் செயல்பாடுகளையும் பார்க்கலாம்.  
உற்பத்தி துறையின் வளர்ச்சி ஜூன் காலாண்டில் 3.5 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 1.2 சதவிகிதம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சுரங்க தொழில் 2.1 சதவிதம் வளர்ச்சி கண்டு 3.9 % ஆக உள்ளது.  நிதி சேவையின் வளர்ச்சி 10.4 சதவிகிதமாக வளர்ந்து எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. 
 
நடப்பு நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவிகிதமாக உள்ளது. இதற்கு ஏற்ப எதிர்பார்ப்புகளும் விரிவடைகிறது. இதற்கு ஏற்ப வரி வருவாயின் வளர்ச்சி எதிர்பார்ப்பது போல இல்லை. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ