Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் ஷாப்பிங்- விழிப்புணர்வு சர்வே!

இந்திய நுகர்வோர் சங்கம் மற்றும் சென்னை எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து  மின் வணிகத்தில் நுகர்வோர்களின் பொறுப்பு, அவர்களின் உரிமை குறித்த விழிப்புணர்வு சர்வே ஒன்றை நடத்தியது. இதில் ஆன்லைன் ஷாப்பிங் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் அணுகுமுறைகள் தெரியவந்திருக்கின்றன. இந்த சர்வே 17 வயது முதல் 60 வயது வரை உள்ள சென்னை மக்களை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் ஆண்கள் 47% பேரும், பெண்கள் 53% பேரும் பங்கேற்றிருக்கிறார்கள். சர்வே மேற்கொண்டவர்களில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதாக 66% பேரும், 34% பேர் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

   

ஆன்லைன் ஷாப்பிங் ஏன் செய்வதில்லை என்று அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, பொருட்களைத் தொட்டுப் பார்த்து அதன் தரத்தை சரிபார்க்க முடிவதில்லை என்று 32% பேரும், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பணம் செலுத்தும் வசதியை நாங்கள் நம்புவதில்லை என்று 19% பேரும், ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அவ்வளவாக எங்களுக்கு தெரியவில்லை என்று 16% பேரும், மீதி பேர் வீட்டின் கம்ப்யூட்டர் இல்லை, ஆன்லைன் ஷாப்பிங் பொருட்கள் குறித்து மக்களிடமிருந்து சரியான ஃபீட்பேக் இல்லை என்று இன்னும் பல காரணங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். எந்த பொருட்களை அதிகமாக நீங்கள் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வீர்கள் என்ற கேள்விக்கு 60% பேர் எலெக்ட்ரானிக்ஸ் என்று பதில் அளித்திருக்கிறார்கள்.

 

இந்த சர்வேயில் பதில் அளித்தவர்களில் தேவைப்படும்போது ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வேன் என்கிறவர்கள் 88% பேர், மாதம்தோறும் செய்வேன் என்கிறவர்கள் 12% பேர். 62% பேர் ஃப்ளிப்கார்ட் வலைதளத்தையும், அமேசான் வலைதளத்தை 24% பேரும் பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரச்னைகள் வருவதாகவும், குறிப்பாக பணம் செலுத்தும் வசதியில்தான் அந்த பிரச்னைகள் வருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இதில் இந்த பிரச்னைகள் சீக்கிரமாகவே தீர்த்து வைக்கப்படுகின்றன என்பவர்களின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது.

- செ.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close