Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெஸ்ட் குளோபல் கிரீன் பிராண்டு 2014 (Best Global Green Brands 2014)!

இன்டர் பிராண்டு நிறுவனம் சமீபத்தில் 2014-ம் ஆண்டின் டாப் 50 பெஸ்ட் குளோபல் கிரீன் பிராண்ட் நிறுவனங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த மதிப்பீடானது ஒரு நிறுவனம் சுற்றுச்சூழலுக்குப் பாதகம்் விளைவிக்காமல் பொருட்களைத் தயார் செய்வது, நீர் ஆதாரங்களைச் சேமிப்பது போன்ற காரணிகளை மையப்படுத்திக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஃபோர்டு நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் வாகனங்களில் பொருத்தப்படும் 90% இயந்திரங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவாறு வடிவமைக்கப்படுகின்றனவாம். அதற்கு அடுத்த இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இருக்கின்றன. நோக்கியா நிறுவனம் ஆறாவது இடத்திலும், சோனி, அடிடாஸ் மற்றும் சாம்சங் நிறுவங்கள் முறையே ஏழு, எட்டு மற்றும் பதினொன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP