Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் ஒரு லட்சம் டிக்கெட் விற்ற ஸ்பைஸ் ஜெட்

 ஒரே நாளில் ஒரு லட்சம் டிக்கெட் விற்ற ஸ்பைஸ் ஜெட்

 
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம், அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 16ம் தேதியிலிருந்து அக்டோபர் 24ம் தேதி வரை விமானத்தில் பயணம் செய்ய செப்டம்பர் 1 முதல் 3 தேதிக்குள் முன்பதிவு செய்தால் 499 ரூபாயில் உள்நாட்டு விமான சேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது.
 
 
இதனை அடுத்து முதல் நாள் இறுதியில் 4 மணி நிலவரப்படி 1 லட்சம் முன்பதிவுகளை தாண்டியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரே நாளில் அதிகம் புக் செய்யப்பட்ட விமான சேவை நிறுவனம் என்ற பெயரையும் ஸ்பைஸ்ஜெட் பெற்றுள்ளது.
 
இது போன்ற சலுகைகள் மூலம் உள்நாட்டு பயணிகள் அதிக மகிழ்ச்சியடைவார்கள், விடுமுறை பயணங்களை முன்கூட்டியே முடிவு செய்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ