Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாத கிங்ஃபிஷர் மல்லையா!

கிங்ஃபிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் என பொதுத்துறை வங்கியான யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 4022 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது.
 
இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை 350 கோடியாகும். அதுமட்டுமின்றி புதிய விமானங்களைப் பெறுவதற்கான முன்தொகையாகவும் இந்த வங்கி 60 கோடி அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே கொல்கத்தாவைச் சேர்ந்த யுனைடெட் வங்கி கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவையும், அந்த நிறுவனத்தின் மற்ற மூன்று இயக்குனர்களையும் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்கள் என்று அறிவிக்கும் முயற்சியில் இறங்கியது.
 
இதனைத் தொடர்ந்து கிங்பிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவையும், மற்ற மூன்று இயக்குனர்களையும் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்களாக யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு இந்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் போன்றவற்றிடம் தெரிவிக்கப்படும் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் தீபக் நரங் கூறியுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ