Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கை

 

இந்தியாவையே உலுக்கிய முகலிவாக்கம் கட்டட விபத்து குறித்து ஆராய ஒரு நபர் விசாரனை கமிஷனை அமைத்தது தமிழக அரசு. 
 
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். ரகுபதி இந்த தலைமையில் அமைந்த இந்த விசாரணை கமிஷன் தனது விசாரணையை முடித்து தமிழக அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 
இந்த அறிக்கையில் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பான அனைத்து விவரங்களும் அலசப்பட்டுள்ளது.
கட்டடத்தில் வீடு வாங்கியிருந்த  உரிமையாளர்கள், கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த அருகில் இருந்த கட்டிடங்களில் வசித்தவர்கள் என பலரிடமும் விசாரித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
930 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் கட்டட விபத்துக்கான காரணங்கள், பாதிக்கபட்டவர்கள் வாக்குமூலம், கட்டடம் தொடர்பான ஆவணங்கள் என தனித்தனி மூன்று அறிக்கைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. 
 
244 பக்கங்கள் கொண்ட முதல் அறிக்கை கட்டிட விபத்துக்கு பொறுப்பானவர்கள், வீடு வாங்கியவர்கள், பாதிக்கபட்டவர்கள் வாக்குமூலம் கொண்டதாகும். 337 பக்கங்கள் கொண்ட இரண்டாவது அறிக்கை கட்டடம் தொடர்பான ஆவணங்கள், அனுமதிகள், திட்ட வரைப்படம், அது குறித்து  பல்வேறு நிறுவனங்களும் கொடுத்த அறிக்கைகள் விளக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட மூன்றாவது அறிக்கையில் கட்டுமான தொழில்நுட்ப விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு ஒன்றிற்காக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதிலில், தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தியதே காரணம் என்பதை குறிப்பிட்டுள்ளது. மேலும் திட்ட வரைபடத்திற்கும், கட்டடம் கட்டியுள்ளதற்கும் வேறுபாடு உள்ளது  என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த கட்டிட விபத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 
 
ஜூலை 28 அன்று நடந்த இந்த விபத்தில் 61 பேர் மரணமடைந்ததும், 27 பேர் படுகாயமடைந்தனர். கட்டய உரிமையாளர் உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ